இந்தியா

வெள்ள பாதிப்பு: அசாம் முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை!

அசாமில் வெள்ளபாதிப்பு தொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். 

DIN


அசாமில் வெள்ளபாதிப்பு தொடர்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். 

வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலுள்ள மக்களை மீட்பது, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் பாதுக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ போதுமான மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். 

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

16 மாவட்டங்களில் 54 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 1, 538 கிராமங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

பஜாலி, நல்பாரி, பர்பீட்டா, தம்லூர், பக்சா, கோஹல்பாரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 4.89 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? விராட் கோலியின் பதிவால் குழப்பம்!

நயினார் நாகேந்திரன் கோபப்பட்டு பார்த்ததேயில்லை: பேரவையில் புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்! காரணம்?

அக்.22-ல் சபரிமலையில் குடியரசு தலைவர் வழிபாடு!

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

கிட்னிகள் ஜாக்கிரதை! பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

SCROLL FOR NEXT