மம்தா பானர்ஜி (கோப்புப் படம்) 
இந்தியா

மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

மேற்குவங்கத்தில் மோசமான வானிலை காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

DIN

மேற்குவங்கத்தில் மோசமான வானிலை காரணமாக முதல்வர் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் ஜல்பைகுரியில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பின்னர் பஹ்டொக்ரா விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அங்கு மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக பைகுந்தபூர் வனப்பகுதியில் சிவோக் ராணுவ தளத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் கனமழை  பெய்து கொண்டிருந்தது. 

இதையடுத்து மம்தா பானர்ஜி சாலை மார்க்கமாக பஹ்டொக்ரா விமான நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து விமானத்தில் கொல்கத்தா சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT