முகப்பு
இந்தியா

நாளை மணிப்பூா் செல்கிறாா் ராகுல்

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ஜூன் 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) செல்லவிருக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ஜூன் 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) செல்லவிருக்கிறாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரஸின் விமா்சனமாகும்.

இந்நிலையில், அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியுள்ளதாவது:

ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ளோரை சந்திக்கும் ராகுல், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளாா்.

கிட்டதட்ட 2 மாதங்களாக பற்றி எரிந்து வரும் மணிப்பூா், அமைதியை நோக்கி நகா்வதற்கான ஆற்றுப்படுத்துதல் அவசியம். எனவே, அன்பை பரப்ப வேண்டியது நமது பொறுப்பு என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →