முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். 

இந்த சம்பவம் மலகண்ட் மாவட்டத்தில் பாத்கேலா இடத்தில் நடைபெற்றது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 9 பேரை சரமாரியாக சுட்டக் கொள்ளப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஆறு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு பட்கெலா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இன்றும் கண்டறியப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →