இந்தியா

இந்தாண்டில் 18 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம்: சவூதி அரேபியா

DIN

ரியாத்: 2023-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பொது ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 

அரபு நாடுகளில் மொத்தம் 3,46,000 பேரும், ஆசிய நாடுகளில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமானோரும் இந்தாண்டு புனித பயணத்தில் பங்கேற்றனர். அதேசமயம் அரபு நாடுகளைத் தவிர்த்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 2.23,000 பேர் வந்திருந்தனர். 

மேலும், 36,500 பேர் ஜரோப்பாவில் இருந்தும், ஆஸ்திரேலியா மற்றும் பட்டியலிடப்படாத பிற நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். மொத்தம் 2.1 சதவீதம் பேர் இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு அதிகளவிலான மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

SCROLL FOR NEXT