முகப்பு
இந்தியா

பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூன், 2023 at 9:37 AM
பகிர்:

தில்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரின் பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதில், “பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொடுக்கட்டும். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.” என்று மோடி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.