பிற மாநிலங்களில் தக்காளி விலை எவ்வளவு தெரியுமா?
பருவம் தள்ளிப்போனதாலும், விளைச்சல் அதிகரிக்காததாலும், வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பிற மாநிலங்களில் தக்காளி விலை எவ்வளவு என்பது குறித்து தரவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி வரத்து குறைவு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக மொத்த விலை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதிக்கு கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தக்காளி இறக்குமதியாகிறது.
Advertisement
பருவம் தள்ளிப்போனதாலும், விளைச்சல் அதிகரிக்காததாலும், வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கனிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தக்காளி விலை ரூ.60 முதல் 80 வரை விற்பனையானாலும், சில இடங்களில் நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.
இதேபோன்று சென்னை மட்டுமின்றி உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா, ராணிப்பூர், திரிபுராவின் அகர்தாலா, ஒடிசாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் ரூ.100-க்கு மேல் தக்காளி விற்பனையாகிறது.
இதேபோன்று தமிழகத்திலும் கன்னியாகுமரி, கர்நாடகத்தின் பெல்லாரி, கேரளத்தின் எர்ணாகுளம், ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 - 122 வரை விற்பனையாகிறது.