இந்தியா

சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் இனி இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாம்

இனி, சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்.

DIN

மும்பை: சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ஆக்ஸிஸ் வங்கி வாங்கும் நடைமுறை விரைவில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இனி, சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ரூ.12,325 கோடிக்கு கைப்பற்றுவதாக அறிவித்திருந்தது.

சிட்டி வங்கி, வாடிக்கையாளர் வணிகப்பிரிவில் கடன் வழங்குதல், கிரெடிட் கார்டு, சொத்துகள் மீதான கடன் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை மேற்கொண்டு வந்தது.

இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், சிட்டி வங்கியின் கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் அனைத்தும் ஆக்ஸிஸ் வங்கி என்று பெயர்மாற்றப்படும். அதேவேளையில், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு எண், கட்டணம், சேவைகள் என எதையும் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது வங்கிப் பெயர் மட்டுமே மாறுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஏடிஎம், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை என அனைத்தையும் வழக்கம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் அனைத்து நடைமுறைகளும் அப்படியேதான் இருக்கும் என்றும், எந்த கெடு தேதியிலும் மாற்றமிருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, சிட்டி வங்கியின் வாடிக்கையாளர்களின் ஐஎஃப்எஸ்சி கோடு உள்ளிட்ட விவரங்களும் மாறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT