இந்தியா

நாகாலாந்தில் வரலாற்று சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ.

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் எம்.எம்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி முறையே 40, 19 தொகுதிகளில் களமிறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 12 வேட்பாளா்களை களமிறக்கின.

நான்கு பெண் வேட்பாளர்கள்: நாகாலாந்தில் ஹெக்கானி ஜக்காலு, சால்ஹூட்டூ க்ரூஸ், ஹுகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர்.  

இதில், திமாபூர்-3 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி(என்டிபிபி) கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்.ஜே.பி (ராம் விலாஸ்) வேட்பாளர் அஸெட்டோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஹேக்கானி ஜக்காலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

47 வயதான ஹேக்கானி ஜக்காலு,  சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். தொழிலதிபராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT