இந்தியா

தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு!

கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

DIN

கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், தில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் அவருக்கு ஜாமீன் கோரி தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT