இந்தியா

பறவைக்காய்ச்சல் பரவும் போது நான் கோழிக்கறி அதிகம் சாப்பிடுவேன்: அமைச்சர் பேச்சு

PTI

ராஞ்சி: நாட்டில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவுப்போது நான் கோழிக்கறி அதிகம் சாப்பிடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மாநிலத்தில் ஒரு சில பறவைக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை நிலைமை மோசமாகவில்லை. கால்நடை வளர்ப்புத் துறையுடன் நாங்கள் தொடர்பில் இருந்து நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்றும், யாருக்கும் இந்த பாதிப்பு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

பயப்படவேண்டிய அவசியம் இல்லை. பறவைக் காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் கோழிக்கறியை அதிகம் சாப்பிடுவேன் என்று கூறியிருக்கும் அவர், கோழிக்கறியை சரியாக சமைத்து சாப்பிட்டால் ஒன்றும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள அரசு கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட சில பண்ணைகளில் மட்டும் கடந்த 5 நாள்களில் 400க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

கேரளத்தில் தீவிரமடையும் மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது... என்ன சொல்கிறார் விராட் கோலி? (விடியோ)

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

SCROLL FOR NEXT