இந்தியா

கர்நாடக தேர்தல்: பொதுக்கூட்டத்தில் கேஜரிவால் இன்று உரை!

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்துகிறார். 

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்துகிறார். 

கர்நாடகத்தில் தனது கட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தாவணகெரே நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கேஜரிவால், பஞ்சாப் பிரதமர் பகவந்த் மான் ஆகியோர் ஹூப்பள்ளியை அடைந்து, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தாவணகெரேவிக்கு வருகின்றனர். 

மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டம், தாலுகா, தொகுதி, வட்டம் மற்றும் பூத் மட்டத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் தாவங்கேரே மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 

தில்லியில் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுச் செயல்படுத்திய திட்டங்களை கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் நகலெடுத்து மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக மாநிலக் கட்சி பிரிவு கூறுகிறது. 

ஆம் ஆத்மி கட்சி தில்லி மற்றும் பஞ்சாபில் கொண்டு வந்த சீர்திருத்தங்களை கர்நாடக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் பிருத்வி ரெட்டி தெரிவித்துள்ளார்.

தில்லி அரசு நடத்தியுள்ள சாதனைகள் அனைத்தும், பேரணியின் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் தெரிவிக்கப்படும் என்று ரெட்டி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT