இந்தியா

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2,791 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை சார்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று (மார்ச் 5) காலை 8 மணி வரை நிலவரப் படி கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக 5,30,775 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,87,820 ஆக உள்ளது. தேசிய அளவில் கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.80 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 சதவிகிதமாக இருக்கிறது. இதுவரை 220.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

SCROLL FOR NEXT