இந்தியா

பெகாசஸ் ராகுலின் தொலைபேசியில் இல்லை; மனதில் இருக்கிறது: சிவராஜ் சிங் சௌகான்

பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார். 

DIN

பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார்.

லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாகவும் பேசினார். இது தொடர்பாக உளவுத் துறை தன்னை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது: பெகாசஸ் உளவு செயலி ராகுலின் தொலைபேசியில் இல்லை, அது அவரது மனதில் தான் இருக்கிறது. பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளது. நான் ராகுல் காந்தியின் அறிவுத் திறனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்கு சென்று நமது இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியாவினை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் நடந்து கொள்வது அவர்களின் புதிய திட்டம். இந்தியா குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், இந்தியாவும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT