புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பிகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கடும் பீதியை உருவாக்கியது.
பிகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பிகார் காவல்துறை ஒருவரைக் கைது செய்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி விடியோக்கள் தொடர்பாக ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜி. ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்தார்.
"போலி விடியோக்களை பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளனர். 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது" என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.