இந்தியா

மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல்  மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேவிந்தர் சர்மா, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு தேவிந்தர் சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையும் தேவிந்தர் சர்மாவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT