இந்தியா

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுளள்து.

DIN


இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுளள்து.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான neet.nta.nic.in இணையதளத்தில், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நீட் 2023ஆம் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6ஆம் தேதி கடைசியாகும். நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழடை நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1600லிருந்து ரூ.1700 ஆக அதிகரிக்கப்பட்டுளள்து. இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1600 ஆகவும், அதுபோல எஸ்சி/எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே வாழும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.9,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் ஜிஎஸ்டி மற்றும் செயல்முறைக் கட்டணங்களையும் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களது கல்விச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்தபிறகு, விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிச் சான்றை புகைப்படமாக சேமித்து வைத்துக் கொள்வது பயனளிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT