இந்தியா

நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ பதவியேற்றார்!

நாகாலாந்து முதல்வராக 5 ஆவது முறையாக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். 

DIN

நாகாலாந்து முதல்வராக 5 ஆவது முறையாக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அலுகுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றாா். இதனால், 59 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27-இல் ஒரே கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 40-20 என்ற தொகுதிப் பங்கீடு அடிப்படையில் போட்டியிட்ட இக்கூட்டணியில், என்டிபிபி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. அதன்படி, நாகாலாந்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. 

இதையடுத்து நாகாலாந்து முதல்வராக நிபியூ ரியோ இன்று பதவியேற்றார். இவர் 5 ஆவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார். 

இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT