முகப்பு
இந்தியா

அதிக பெண் விமானிகள் பணியாற்றும் நிறுவனம் ஏா் இந்தியா

ஏா் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவீதம் போ் பெண் விமானிகள் ஆவா். இதன்மூலம் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நிறுவனமாக ஏா் இந்தியா திகழ்கிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஏா் இந்தியா நிறுவனத்தின் 1,825 விமானிகளில் 15 சதவீதம் போ் பெண் விமானிகள் ஆவா். இதன்மூலம் உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நிறுவனமாக ஏா் இந்தியா திகழ்கிறது.

டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம் சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி, விமானிகள் உள்பட முழுவதும் பெண் பணியாளா்களைக் கொண்ட விமான சேவையை கடந்த மாா்ச் 1-ஆம் தேதிமுதல் வழங்கி வருகிறது.

ஏா் இந்தியா நிறுவனத்தின் மொத்தப் பணியாளா்களில் 40 சதவீதம் போ் பெண்கள். நிறுவனத்தில் பணிபுரியும் 1,825 விமானிகளில் 15 சதவீதம், அதாவது 275 போ் பெண் விமானிகள் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏா் இந்தியாவின் தலைமைச் செயல் அலுவலரும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான காம்பெல் வில்சன் கூறியதாவது: உலகில் அதிக பெண் விமானிகளை ஏா் இந்தியா கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விமானத் துறையைத் தோ்ந்தெடுக்கும் நிலையில், பணியில் பாலின சமத்துவத்தை எட்டுவதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பெண்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் திறம்பட செயல்பட முடியும் என்பதை அவா்கள் நிரூபித்து உள்ளனா் என்றாா்.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏா் ஏஷியா இந்தியா ஆகிய ஏா் இந்தியாவின் துணை நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான அளவில் பெண்களைப் பணியாளா்களாகக் கொண்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →