இந்தியா

பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான சதீஷ் கௌசிக் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான சதீஷ் கௌசிக் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது சுட்டுரையில், 

புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைபெற்ற சதீஷ் கௌசிக்கின் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அவரது அற்புதமான நடிப்பு மற்றும் இயக்கத்தால் பலரின் இதயங்களை வென்ற படைப்பாற்றல் மேதை. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என்று அவர் பதிவிட்டுள்ளார். 

கௌசிக் அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 

தேசிய நாடகம் மற்றும் திரைப்படம் தொலைக்காட்சி பள்ளியின் முன்னாள் மாணவராவார் "ஜானே பி தோ யாரோன்" மிஸ்டர் இந்தியா, வீனா மஸ்தானா போன்ற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாகின. 

"ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' மற்றும் 'பிரேம்'ஆகிய இரண்டு படங்களையும் கௌசிக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT