இந்தியா

ஐஆர்சிடிசி ஊழல்: பிகாரில் 14 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! 

ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பிகாரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ அபு டோஜானாவின் வீடு உள்பட 14-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

DIN

புது தில்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷம்(ஐஆர்சிடிசி)ஊழல் தொடர்பாக பிகாரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ அபு டோஜானாவின் வீடு உள்பட 14-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. 

இன்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை குழுவினர் பாட்னாவில் உள்ள அபு டோஜானாவின் வீட்டை அடைந்த நிலையில், தற்போது ஆவணங்களை ஆய்வு செய்துவருகிறது. 

மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தபோது, ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. லாலு பிரசாத்தின் உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் பெயரில் நிலத்தை மாற்றியவர்களுக்கு குரூப் டி பதவிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீரின்றி வடது ஒகேனக்கல் அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மனித இறைச்சி கேட்டு உணவகம் சூறை: 3 போ் கைது

அயலகத் தமிழா்களின் கனவுகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

போதமலைக்கு சாலை அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி. ஆய்வு

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT