இந்தியா

அமலாக்கத்துறை சம்மன்: கேசிஆரின் மகள் கவிதா ஆஜர்!

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா இன்று(சனிக்கிழமை) அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

DIN

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா இன்று(சனிக்கிழமை) அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

தில்லி கலால் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கலால் கொள்கையில், மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் சரத் ரெட்டி, கவிதா, மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 

அமலாக்கத் துறை குறிப்பிட்ட நபா்களில் ஒருவரான கவிதா, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் ஆவாா். அவா் தெலங்கானா சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். இந்த வழக்குத் தொடா்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக மார்ச் 9 ஆம் தேதி விசாரணைக்கு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கவிதா தரப்பில் இரு நாள்கள் அவகாசம் கேட்கவே, மார்ச் 11 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை கூறியது. 

அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தெலங்கானா எம்எல்சி கவிதா இன்று ஆஜராகியுள்ளார். 

பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி கவிதா நேற்று தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.25,26-ல் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் களஆய்வு!

வித் லவ் டைட்டில் டீசர்!

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு!

இந்தியா - பாக். போரை நிறுத்தினேன்: மம்தானி உடனான சந்திப்பில் டிரம்ப் பேச்சு!

குவாஹாட்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!

SCROLL FOR NEXT