ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஷல்னார் ஹங்னிகூட்டில் ஹந்த்வாரா காவல்துறையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஏகே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க- 'முதல்வரின் வாழ்க்கைப் பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் வைக்க வேண்டும்'
இதன்அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஹந்த்வாரா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.