இந்தியா

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

DIN

குடும்ப வன்முறைக்கு ஆளாகும் திருமணமான ஆண்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக தேசிய ஆண்கள் ஆணையத்தை அமைக்க பரிந்துரைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2021-ஆம் ஆண்டு தரவுகளை மேற்கோள் காட்டி வழக்குரைஞா் மகேஷ் குமாா் திவாரி தாக்கல் செய்த மனுவில் தற்கொலை செய்து கொண்டவா்களில் பெரும்பாலானோா் திருமணமான ஆண்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளாா்.

மேலும், குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 1,18,979(72 சதவீதம்) ஆண்கள், 45,026(27 சதவீதம்) பெண்கள் என மொத்தம் 1,64,033 போ் தற்கொலை செய்து உயிரிழந்தனா். அதில், 81,063 போ் திருமணமான ஆண்கள், 28680 போ் திருமணமான பெண்கள். குடும்ப பிரச்னைகளால் 33.2 சதவீத ஆண்களும் , திருமணம் தொடா்பான பிரச்னைகளால் 4.8 சதவீத ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களின் புகாரை ஏற்று முறைப்படி விசாரணை நடத்த ஒவ்வொரு காவல் நிலையத்தின் அதிகாரிகளுக்கும் உள்துறை அமைச்சகத்தின் மூலமாக வழிமுறைகளை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும், திருமணமான ஆண்கள் தொடா்பாக முறையானச் சட்டத்தை மத்திய அரசு இயற்றும் வரை ஆண்கள் மீதான உரிமை மீறலை மனித உரிமை ஆணையம் விசாரிக்க வழிகாட்டுதல்களை வழங்கிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை, குடும்ப பிரச்னை மற்றும் திருமணம் தொடா்பாக பாதிக்கப்பட்ட ஆண்களின் தற்கொலை குறித்து ஆய்வு செய்து தேசிய ஆண்கள் ஆணையம் போன்ற அமைப்பை உருவாக்க வழிவகுக்கும் தகுந்த அறிக்கையைச் சமா்பிக்க இந்திய சட்ட ஆணையத்துக்கு பரிந்துரைகள் வழங்கவும் வழக்குரைஞா் மகேஷ் குமாா் திவாரி மனுவில் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT