இந்தியா

கரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தலைமை செயலாளர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மார்ச் 8 ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலை நுண்ணிய அளவில் ஆராயவும், சுகாதார அமைச்சகம் வழங்கிய அறிவுரைகளை  பின்பற்றுவதை உறுதிசெய்து, நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கவனம் செலுத்துமாறும் பூஷன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

SCROLL FOR NEXT