டிரம்மில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: 3 பேர் கைது!
கர்நாடகத்தில் டிரம்முக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகத்தில் டிரம்முக்குள் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி பைப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே பிளாஸ்டிக் டிரம்மில் பெண் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலைக்குப் பின்னால் கொலையாளி கும்பல் இருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில் விசாரணை தொடங்கினர்.
உயிரிழந்த பெண் தமன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிளாஸ்டிக் டிரம்மில் இருந்த ஸ்டிக்கரில் இருந்து போலீஸ் குழுவிற்கு முக்கிய துப்பு கிடைத்தது. மேலும், கொலையாளிகள் ஆட்டோவில் வந்து சடலம் இருந்த டிரம்மை ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் வைக்கும் காட்சிகளும் சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர்.
இதன் அடிப்படையில் மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, குடும்ப தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தமன்னா தனது கணவர் அஃப்ரோஜை விவாகரத்து செய்துவிட்டு, அவரது உறவினர்களில் ஒருவரான இன்டிகாப்பை திருமணம் செய்து கொண்டார்.
மார்ச் 12 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் தமன்னாவை மதிய விருந்துக்கு அழைத்து, அவரை கொன்றுள்ளார். பின்னர் நள்ளிரவுக்குப் பின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். 2022 டிசம்பருக்குப் பிறகு இது மூன்றாவது சம்பவம் என்பதால் போலீசார் கவலையடைந்தனர்.