இந்தியா

குஜராத்தில் அமித்ஷா: பால் உற்பத்தி மாநாட்டில் பங்கேற்பு!

DIN

இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

காந்திநகரில் இந்திய பால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 49-வது பால் உற்பத்தி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். 

பின்னர், காந்திநகரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்கிறார். 

அடுத்து, காந்திநகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் மதிய இலவச உணவு பிரசாரத்தைத் தொடங்கிவைக்கிறார். பின்னர் வதோதராவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு மைதானத்தில் நடைபெறும் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, உள்துறை அமைச்சர் ஜூனாகத் மாவட்ட வங்கி தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டுவார். ஜூனாகத்தில் உள்ள ஏபிஎம்சி டோலட்பாராவில் விவசாய முகாமில் ஏபிஎம்சி கிசான் பவனைத் திறந்து வைப்பார்.

ஷா பின்னர் சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்வார் மற்றும் சோம்நாத் அறக்கட்டளையின் மொபைல் செயலியை அறிமுகப்படுத்துகிறார். 

குஜராத் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு ஷாவின் இரண்டு நாள் குஜராத் பயணம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT