இந்தியா

நாட்டில் புதிதாக 4,282 பேருக்கு கரோனா தொற்று

DIN

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,282 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,547 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது.

தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 4.92% ஆகவும், வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 4% ஆகவும் உள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 6,037 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை மொத்தம் 4,43,70,878 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 172 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 87,038 பேரிடம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை 92.67,60,898 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT