இந்தியா

மகாராஷ்டிரம்: 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலி 8-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்தது.

DIN

தாணே: மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்தது.

பிவாண்டி பகுதியில் இருந்த அக்கட்டடத்தின் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வந்தன. 2-ஆவது தளத்தில் 4 குடும்பங்கள் வசித்து வந்தன. கட்டடத்தின் மேல் தளத்தில் செல்போன் கோபுரம் அண்மையில் நிறுவப்பட்டது.

இந்நிலையில், 2014 இல் கட்டப்பட்ட அந்தக் கட்டடம் சனிக்கிழமை மதியம் 1.45 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தொழிலாளா்கள் உள்ளிட்டோா் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. 3 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது. இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது. 

காயங்களுடன் மீட்கப்பட்ட 10 போ், பிவாண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, காயமுற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

தாணே மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு, ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்தாா்.

செல்போன் கோபுரத்தின் பாரம் தாங்காமல் கட்டடம் இடிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடா்பாக, கட்டடத்தின் உரிமையாளா் இந்திரபால் பாட்டீலை கைது செய்து, காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், 2 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 8-ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நிகழ்ந்து கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு உடல்கள்மீட்கப்பட்டன, கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு முழு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT