முகப்பு
இந்தியா

மார்ச் மாதத்தில் 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கம்

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:54 PM
கோப்புப்படம்
பகிர்:


புது தில்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 47 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த 46 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அதைவிட அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 


+91 என்று தொடங்கும் செல்லிடப்பேசி எண்களில்,  குறைதீர்ப்புப் பிரிவு வாயிலாக பயனாளிகளிடமிருந்து கிடைத்தப் புகார்கள், விதிமீறல்களைக் கண்டறியவும், தடுக்கவும், அந்தப் பிரிவு சுயமாக மேற்கொண்டு வரும் வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு மார்ச் 1 - 31-ஆம் தேதி வரை 47,15,906 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  இதில், 16,59,385 கணக்குகள், பயனாளர்களிடமிருந்து எந்த புகாரும் வராத நிலையில், சுயமாக மேற்கொண்டு வரும் வழிமுறைகளின்படி முடக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர உயர்தர தொழில்நுட்பம், தரவு அறிவியலாளர்கள், நிபுணர்கள் உதவியுடன் வாட்ஸ்-ஆப் தளத்தில் பயனாளிகளின் பாதுகாப்பைக் கருதி இந்த தொடர் நடவடிக்கையை வாட்ஸ்-ஆப் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →