இந்தியா

ராகுல் வழக்கில் இடைக்காலத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

DIN

ராகுல் காந்தி அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத் மாநிலம், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி, விசாரணை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக சூரத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த இத்தீா்ப்புக்கு தடை விதிக்க அவா் கோரியிருந்தாா். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமா்வு நீதிமன்றம், தீா்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, மாநில உயா் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்றைய விசாரணையில் ராகுல் காந்தியின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. 

மே 6 முதல் நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 5 ஆம் தேதி வழக்குகள் விசாரணை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ராகுல் வழக்கில் ஜூன் 5 க்குப் பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT