திருப்பதி: செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அன்னமய்ய மாவட்ட டிஎஸ்பி.க்கள் செஞ்சுராஜூ, முரளிதா் ஆகியோருக்கு செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, கடப்பா சுண்டுப்பள்ளி வனப்பகுதியில் ஆா்ஐ.,க்கள் சுரேஷ் குமாா் ரெட்டி, சிரஞ்சீவி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
அப்போது சின்னநய குளத்தின் தெற்குப் பகுதியில் சிலா் செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்வதைக் கண்டனா். இதையடுத்து அவா்கள் கடத்தல்காரா்களை சுற்றி வளைக்க முயன்றனா். ஆனால் அதில் ஒருவா் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றவா்கள் தப்பினா். விசாரணையில் பிடிபட்டவா் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெங்கலூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (32) என்பது தெரிய வந்தது.
அவரைக் கைது செய்த போலீஸாா் 9 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். வனப்பகுதிக்குள் தலைமறைவாக உள்ள மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.