இந்தியா

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட ஷாருக் கான்: ஏன் தெரியுமா?

மும்பை விமான நிலையத்தில் சுயப்படம் எடுக்க வந்த ரசிகரின் செல்போனை ஷாருக்கான் தட்டிவிட்டுச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

DIN


மும்பை விமான நிலையத்தில் சுயப்படம் எடுக்க வந்த ரசிகரின் செல்போனை ஷாருக்கான் தட்டிவிட்டுச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

நடிகர் ஷாருக்கான் செவ்வாய்க்கிழமை மும்பை விமான நிலையத்திற்கு தனது உதவியாளர் பூஜா தத்லானியுடன் திரும்பியுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயன்றபோது தடுப்புகளுக்கு அருகே சூழ்ந்திருந்த தனது ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறு சென்றார். அப்போது அருகில் இருந்த ரசிகர்கள் ஒருவர் தனது செல்போனில் சுயப்படம் எடுக்க முயன்றுள்ளார். 

அப்போது அவரின் கையை ஷாருக் கான் தட்டிவிட்டு வெளியேறும் வழியே சென்று தனது காரை அடைந்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டுன்கி என்ற படத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT