இந்தியா

பாஜகவை விரட்டியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால்

தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தில்லி காவல் துறையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவினை விரட்டியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தில்லி காவல் துறையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவினை விரட்டியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஷ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர். பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளாகியுள்ள பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராடும் நிலையில், அவர்களிடம் காவல் துறை தவறாக நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டுக்காக பதக்கம் வென்று கொடுத்துள்ள வீரர்களிடம் இப்படிதான் தவறாக நடந்து கொள்வார்களா? இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது வெட்கக்கேடான செயலாகும். பாஜக ஒட்டு மொத்தத்தையும் கேலிக் கூத்தாக மாற்றியுள்ளது. பாஜக அடியாட்களை வைத்து இந்த மொத்த அரசியலையும் நகர்த்தி வருகிறது. அவர்களது அட்டூழியத்தை நாம் பொறுத்து கொள்ளக் கூடாது. அவர்களை விரட்டியடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT