முகப்பு
இந்தியா

300 கி.மீ. வேகத்தில் செல்ல முயன்ற யூ-டியூபருக்கு நேர்ந்த பரிதாபம்

யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் சென்று விடியோ வெளியிட நினைத்த யூ-டியூபர், விபத்தில் சிக்கி பலியானார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:55 PM
300 கி.மீ. வேகத்தில் செல்ல முயன்ற யூ-டியூபருக்கு நேர்ந்த பரிதாபம்
பகிர்:

யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் சென்று விடியோ வெளியிட நினைத்த யூ-டியூபர், விபத்தில் சிக்கி பலியானார்.

அகத்தய் சௌகான் என்ற இளைஞரின் யூ-டியூப் பக்கத்தை சுமார் 12 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். எப்போதும் சாகசப் பயணம், அதிவேகப் பயணங்களை மேற்கொண்டு அது தொடர்பான விடியோக்களைப் போட்டு அதன் மூலம் பிரபலமானவர் இவர்.

இந்த நிலையில், அகத்தய், யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் இவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

விபத்து சம்பவம் அனைத்தும், அவரது ஹெல்மெட்டில் இணைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி, அவர் இல்லாமல், அவரது விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
முழு கட்டுரையைப் படிக்க →