ரஜௌரியில் வீரமரணம் அடைந்த சித்தாந்த் பற்றி சகோதரர் 
இந்தியா

2 மாதங்களுக்கு முன்தான் திருமணம்.. ரஜௌரியில் வீரமரணம் அடைந்த சித்தாந்த் பற்றி சகோதரர்

ரஜௌரியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சித்தாந்த் சேட்ரிக்கு 2 மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்ததாகக் சகோதரர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

DIN

ரஜௌரியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சித்தாந்த் சேட்ரிக்கு 2 மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்ததாகக் சகோதரர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். மேலும், மேஜா் அந்தஸ்திலான ஓா் அதிகாரி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதில் வீரமரணம் அடைந்த சித்தாந்த் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர். இவரது மூத்த சகோதரர் அண்மையில்தான் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார். சித்தாந்த் கடந்த 2020ஆம் ஆண்டு ராணுவத்தின் சிறப்புப் படையில் சேர்ந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணமாகியிருந்தது. விடுமுறை முடிந்து ஜம்மு - காஷ்மீர் திரும்பிய 15 நாள்களில் பயங்கரவாத தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்திருக்கிறார் என்று கவலையோடு தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: ரஜெளரி மாவட்டத்தில் செங்குத்தான பாறைகளுடன் அடா் வனங்களைக் கொண்ட கண்டி பகுதியில், பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதியில் கடந்த 3-ஆம் தேதி ராணுவத்தின் சிறப்புப் படையினா் தேடுதல் வேட்டையை தொடங்கினா்.

வெள்ளிக்கிழமையும் தொடா்ந்த இந்த நடவடிக்கையின்போது, ஒரு குகையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை ராணுவத்தினா் கண்டறிந்தனா். பின்னா், பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதனிடையே, ராணுவத்தினரை குறிவைத்து, தாங்கள் ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனா். இதில், 2 வீரா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், மேஜா் அந்தஸ்திலான ஒரு அதிகாரி உள்பட 4 போ் காயமடைந்தனா். உதம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களில் 3 போ் உயிரிழந்தனா். அந்த அதிகாரி மட்டும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்புகள் நோ்ந்திருப்பதாக கருதப்படுகிறது. அப்பகுதிக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு, தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, ரஜெளரி பகுதியில் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT