புதிய உச்சத்தில் தங்கம்!
சர்வதேச உலோக விலைகளின் அதிகரிப்புக்கு மத்தியில் இன்று புதுதில்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.60,600ஆக வர்த்தகமானது.
புதுதில்லி: சர்வதேச உலோக விலைகளின் அதிகரிப்புக்கு மத்தியில் இன்று புதுதில்லியில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.60,600ஆக வர்த்தகமானது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிஸ் மூத்த ஆய்வாளர் சவுமில் காந்தி தெரிவித்தார்.
அதே வேளையில் முந்தைய வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.60,450 ஆக இருந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.120 குறைந்து ரூ.77,580-க்கு விற்பனையானது.
சென்னையில் மே 5ம் தேதி வரலாறு காணாத விலையேற்றத்தைக் கண்ட தங்கம் ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனையானது. அதன்படி, சென்னையில் இன்று (திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.144 அதிகரித்து ரூ.45,680-க்கும், கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
அதே வேளையில் வெளிநாட்டு சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,022 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 25.65 டாலராகவும் வர்த்தகமானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.