இந்தியா

மணிப்பூர் கலவரம்: படிப்பதற்காகச் சென்ற மாணவர்களின் நிலை?

மணிப்பூரில் கல்லூரி மேற்படிப்புக்காக சென்ற மேற்கு வங்க மாணவர்கள் 18 பேரை அம்மாநில அரசு பத்திரமாக மீட்டுள்ளது. 

DIN

மணிப்பூரில் கல்லூரி மேற்படிப்புக்காக சென்ற மேற்கு வங்க மாணவர்கள் 18 பேரை அம்மாநில அரசு பத்திரமாக மீட்டுள்ளது. 

மணிப்பூரிலிருந்து பலர் இடம்பெயர்ந்து வரும் நிலையில், அங்கு படிக்கச்சென்ற மாணவர்களை மேற்கு வங்க அரசு மீட்டுள்ளது. 

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தால், அங்குள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான அண்டை மாநிலங்களுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

மணிப்பூரில் கடந்த வாரம் இரு பிரிவினரிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. மணிப்பூர் மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ள மைதி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். 

 மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மைதி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்க எதிா்ப்பு தெரிவித்து, மாநிலத்திலுள்ள 10 மலைப் பகுதி மாவட்டங்களில், பழங்குடியின மாணவா் சங்கம் சாா்பில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணியின்போது மைதி சமூகத்தினர் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பழங்குடியினத்தை சேர்ந்த பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவம், அசாம் ரைபிள் பிரிவினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர். 

பலர் மணிப்பூரிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், மணிப்பூரில் கல்லூரி பயிலச் சென்ற மேற்கு வங்க மாணவர்கள் 18 பேரை அம்மாநில அரசு பத்திரமாக மீட்டு சொந்த மாநிலத்திற்கு கொண்டுவந்துள்ளது. 

மணிப்பூரிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கச் சென்றவர்கள் இவர்கள். மணிப்பூரிலிருந்து தொடர்ந்து மீட்பு அழைப்புகள் வந்ததால், அங்கு மீட்பு மையத்தை மேற்கு வங்க அரசு நிறுவி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

மணிப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மாணவர்கள் அவர்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT