கோப்புப்படம் 
இந்தியா

புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மம்தா பானர்ஜி

புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

DIN

புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்தார்.

"புயல் குறித்து பயப்படத் தேவையில்லை. புயலால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டால், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை மீட்போம்" என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இது மே 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலை ஒட்டியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேலும் புயலாக மாற வாய்ப்புள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 11-ம் தேதி நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT