முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து: நூலிழையில் உயிர்தப்பிய விமானி!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று வீட்டின் மேற்கூரையின் மேல் விழுந்ததில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் உள்ள விமானப்படைத் தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக மிக்-21 ரக போர் விமானம் இன்று காலை புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹனுமன்கர் அருகே பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வீட்டின் மேல் விழுந்துள்ளது.

இதில், விமானி நூலிழையில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், வீட்டின் அருகே இருந்த இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும், ஆண் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் ராணுவம் விரைந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ராணுவத்தின் துருவ் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதன் சேவையை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →