கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கரோனா தொற்று

நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,331 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,331 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 25,178-லிருந்து 22,742 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: 

புதிதாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன்  சேர்த்து மொத்தமாக 4.49 கோடி பேர் (4,49,72,800) கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,31,707 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  4.44 கோடி பேராக (4,44,18,351) உள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 98.76 சதவிகிதமாக உள்ளது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,742 ஆக உள்ளது. இது மொத்த தொற்றில் 0.06 சதவிகிதம் ஆகும்.

இதுவரை 220.66 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT