ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் மீது கொலை வழக்குப் பதிய தில்லி சாகேத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது காதலி ஷ்ரத்தா வால்கரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலா மீது இன்று தில்லி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்தனா்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்ட நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகே வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆஃப்தாபை காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் மீது கொலை வழக்குப் பதிய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 1-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.