டி.கே. சிவக்குமார் 
இந்தியா

கருத்துக்கணிப்புகளை நம்பவில்லை; 146-க்கு மேல் வெல்வோம்: காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், நான் கருத்துக்கணிப்பு எண்களை நம்புவதில்லை. நாங்கள் நிச்சயம் 146 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். மக்கள் மேம்பட்டுள்ளனர். அவர்களின் சிந்தனை மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சிமுறை கர்நாடகத்தில் தோல்வியடைந்துள்ளது. அதனால் அதுபோன்று இனி நடக்காது எனக் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சட்டமும் இலக்கியமும்!

ஆஸி. ஒருநாள் தொடர்: வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு!

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

SCROLL FOR NEXT