கோப்புப்படம் 
இந்தியா

மே 19 வரை கோ ஃபர்ஸ்ட் விமான சேவைகள் ரத்து!

திவாலாகும் நிலையில் இருக்கும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் சேவை மே 19-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

திவாலாகும் நிலையில் இருக்கும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் சேவை மே 19-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடியா குழுமத்தின் ‘கோ ஃபா்ஸ்ட்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதன் விமான சேவைகள் மே 3ஆம் தேதி முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, விமான சேவையை தொடர்ந்து இயக்க முடியாதது மற்றும் பாதுகாப்பான, போதுமான சேவைகளைக் கொடுக்க முடியாதது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்கமைப்பு இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதுவரை டிக்கெட் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 19 வரை விமான சேவையை நிறுத்துவதாகவும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் கோ ஃபர்ஸ்ட் நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், இரு நாள்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக முதலில் அறிவித்து, பிறகு அது நீட்டிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த விமான நிறுவனத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT