இந்தியா

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

224 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக மாநில சட்டப் பேரவைக்கான தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநிலத்தில் மொத்தம் 5,31,33,054 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 2,67,28,053, பெண்கள் 2,64,00,074, மூன்றாம் பாலினத்தவா் 4,927, மாற்றுத் திறனாளிகள் 5,71,281 அடங்குவா். 11,71,558 புதிய வாக்காளா்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனா்.

மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. தோ்தலை அமைதியாக நடத்துவதற்காக, 1,65,389 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 3.5 லட்சம் அரசு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவை தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண் வேட்பாளா்கள் 2430, பெண் வேட்பாளா்கள் 184 போ் அடக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை கிலோ ரூ.5500-ஆக உயா்வு

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

SCROLL FOR NEXT