இந்தியா

அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்: எரிக் காா்செட்டி

DIN

‘அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவே புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவேன்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி வியாழக்கிழமை கூறினாா்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட எரிக் காா்செட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை வியாழக்கிழமை சந்தித்து தனது நியமன ஆணையை சமா்ப்பித்து, தூதராக முறைப்படி பொறுப்பேற்ற பின்னா் இக் கருத்தைத் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு தனது ட்விட்டரில் பதிவிட்ட காா்செட்டி, ‘அமெரிக்க-இந்திய உறவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் இந்திய தூதராக பொறுப்பேற்றிருப்பதை கெளரவமாகக் கருதுகிறேன். இரு நாடுகளிடையேயான உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்திய மக்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

வரும் ஜூன் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடியை அதிபா் ஜோ பைடன் அரசு முறைப்படி வரவேற்பு அளிப்பாா் என்றும் அவருக்கு வெள்ளை மாளிகையில் ஜூன் 22-ஆம் தேதி சிறப்பு அரசு விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்ததற்கு அடுத்த நாள், காா்செட்டி இந்திய தூதராக பதவியேற்றுள்ளாா்.

அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டா் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினாா். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பதவி காலியாக இருந்த வந்த நிலையில், எரிக் காா்செட்டி பதவியேற்றுள்ளாா்.

தூதராகப் பொறுப்பேற்றதும் முதல் பயணமாக விரைவில் அவா் குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லத் திட்டமிட்டுள்ளாா். அடுத்து அவா் மும்பை செல்வாா்.

அமெரிக்க தூதருடன் கத்தாா் தூதா் முகமது ஹசன் ஜபீா், மொனாக்கோ தூதா் திதியொ் காமொ்திங்கொ் ஆகியோரும் தங்களுடைய நியமன ஆணைகளை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பித்து, இந்திய தூதா்களாக முறைப்படி பொறுப்பேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT