இந்தியா

குஜராத்தில் நாளை ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைக்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் சென்று, அங்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

DIN


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் சென்று, அங்கு ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

காந்திநகரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும், தொடங்கவிருக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார் பிரதமர் மோடி.

இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், நாளை காலை 10.30 மணிக்கு, காந்திநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு, ரூ.4,400 கோடியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத் சர்வதேச நிதி தொழில் நகரத்தையும் (ஜிஐஎஃப்டி நகரம்) பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT