மருத்துவா் வந்தனா தாஸ். 
இந்தியா

இளம் மருத்துவர் கொலை: குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்!

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சமீபத்தில் இளம் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

DIN

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சமீபத்தில் இளம் மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

கேரளத்தில் உள்ள மருத்துவமனையில் 23 வயது பெண் மருத்துவரான வந்தனா தாஸை சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியா் கத்தரிக்கோலால் புதன்கிழமை குத்திக் கொன்றார். அவரை போலீஸாா் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் பாதுகாப்புக்கோரி நேற்று பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இனி மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையை ஏற்று நடத்த உள்ளதாக மூத்த மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

இளம் மருத்துவரின் கொலை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அரசாணையை வெளியிட அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிரடியாக குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

பாஜக கூட்டணிக்கு நடிகா் விஜய் வருகிறாரா?: நயினாா் நாகேந்திரன் பதில்

வேலூர் கனமழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

2-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

ஆவடி அருகே 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT