இந்தியா

கர்நாடக தேர்தல்: சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு பின்னடைவு!

கர்நாடக மாநிலம், பெல்லாரி கிராமப்புற காங்கிரஸ் வேட்பாளர் பி.நாகேந்திரன் தொடர்ந்து 20,163 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். 

DIN

கர்நாடக மாநிலம், பெல்லாரி கிராமப்புற காங்கிரஸ் வேட்பாளர் பி.நாகேந்திரன் தொடர்ந்து 20,163 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் தேர்வு முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. 

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காலை 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 123, பாஜக 71 இடங்களும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில், பாஜகவின் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை எதிர்த்து பெல்லாரி கிராமப்புற காங்கிரஸ் வேட்பாளர் பி.நாகேந்திரன் 20,163 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

ஸ்ரீராமுலு 27,767 வாக்குகளும், நாகேந்திரன் 47,930 வாக்குகளும் பெற்றனர்.

இதனிடையே ஸ்ரீராமுலுவு தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT