முகப்பு
இந்தியா

சித்தராமையாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்

முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சித்தராமையாவுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கட்சிக்காக பலமுறை தியாகம் செய்து சித்தராமையாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளில் 136 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸுக்கு 136 இடங்கள் கிடைத்துள்ளன. 
இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக சித்தராமையா அல்லது டி.கே.சிவக்குமாா் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட உள்ளார். 
அதேசமயம் முதல்வா் பதவிக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி தொடர்பாக இருத்தரப்பின் ஆதரவாளர்களும் மாறி, மாறி போட்டிப்போட்டுக்கொண்டு போஸ்டர் ஒட்டி வருவதால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →